திரிஷா…
தமிழ் சினிமாவில் 90களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தற்போது முன்னணி நடிகை என்ற இடத்தையும் பிடித்து வந்தார்.
சில நடிகைகளைப் போல திரிஷாவும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள நினைத்தார். அப்போது தொழிலதிபர் வருண் மணியன் என்பவருடன் காதல் வலையில் விழுந்த தான் அவரையே திருமணம் செ.ய்.து கொள்ளலாம் என முடிவு எடுத்து நிச்சயதார்த்தத்தை மிகவும் பிரமாண்ட முறையில் செய்தார்.
அதன் பிறகு காரணமே சொல்லாமல் இருவரும் நிச்சயதார்த்த துடன் தங்களது உறவை முறித்துக் கொண்டனர்.
அதன்பிறகு இருதரப்பிலும் திருமணத்தை பற்றிய பேச்சுக்களே எடுக்கவே இல்லை. அதற்கு காரணமும் ஒரு நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது. இந்நிலையில்தான் திரிஷா தரப்பில் இருந்து ஒரு தகவல்.
திரிஷா திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக சினிமாவில் நடிக்க விரும்பியதாகவும் ஆனால் அதற்கு அவர்களது தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டவில்லை எனவும் தெரிகிறது.
என்னால் சினிமாவை விட்டு இருக்க முடியாது என்று கூறி வருண் மணியனை திரிஷா நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது தெலுங்கு வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.