“என் பணத்தை கொடுத்திடுங்க” காலில் விழுந்து கதறிய பெண்.. அசராமல் நின்ற நபர் : உருக்கமான வீடியோ!!

539

கன்னியாகுமரி….

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் கலா. இவருடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த ஜோய் அலெக்ஸ் என்பவரின் குடும்பத்துடன் கலா நெருங்கிப் பழகிவந்திருக்கிறார். இதனை அடுத்து, அவ்வப்போது ஜோய் அலெக்சிற்கு கடனாக பணம் கொடுத்திருக்கிறார் கலா. மொத்தமாக 3 கோடி ரூபாயை கலாவிடம் பெற்ற அலெக்ஸ், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார்.

இதனை அடுத்து கடன் கொடுத்த பணத்தினை மீட்க நினைத்த கலா, பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறையிலும் தக்கலை காவல்துறையிலும் அலெக்ஸ் மீது புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து ஜோய் அலெக்ஸை நேரில் வரவழைத்து காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தன்னிடம் இருக்கும் நிலத்தை தருவதாக தெரிவித்திருக்கிறார் அலெக்ஸ்.

ஆனால், சில நாட்கள் கழித்து தனது நிலத்தை வேறு ஒரு நபருக்கு அலெக்ஸ் விற்க முயற்சி செய்ததாக கலாவிற்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இதனை அடுத்து பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்ற கலா, தன்னுடைய பணத்தினை மீட்டுத்தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது அவரை சமாதானப்படுத்த காவல்துறை அதிகாரிகள் முயற்சி செய்திருக்கின்றனர். தனது பணத்தினை கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கலா கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.

வாங்கிய கடனை கொடுத்துவிடும்படி ஜோய் அலெக்சின் காலில் விழுந்து கலா கதறும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

தன்னிடம் வாங்கிய கடனை திரும்பிக் கொடுத்துவிடும் படி, கடன் வாங்கியவரின் காலில் பெண் விழுந்து கதறும் இந்த வீடியோ காண்போரை கலங்கடித்துவருகிறது.