தமிழகத்தில் நண்பனின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நபரை கொலை செய்ததாக மூன்று பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.மார்த்தாண்டம் அருகே தேனாம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி ஜோன்ஸ்(வயது 48), கட்டிட தொழிலாளியான இவர் மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து வாழ்கிறார்.
கடந்த 17ம் திகதி குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டார், இதுதொடர்பாக மார்த்தாண்டம் பொலிசார் விசாரணை நடத்தியதில் இவரது நண்பர்களை சுந்தர், சதீஷ் மற்றும் அருளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து மூவரையும் கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.இதில் சுந்தர் அளித்த வாக்குமூலத்தில், எனது நெருங்கிய நண்பர் ஸ்டான்லி ஜோன்ஸ், நாங்கள் காலை வேலைக்கு சென்று விட்டு இரவில் மது அருந்துவோம்.
இதனால் எனது வீடு வரை வந்து செல்வார், எனது மனைவியுடன் பழகினார், எனது மனைவிக்கு போன் செய்து உல்லாசத்துக்கு அழைத்தார்.போதையில் என்னிடனே ”உன் மனைவியை அனுப்பிவை” என கூறினார், இதனால் கோபமானேன்.
தொடர்ச்சியாக தொல்லைகள் கொடுத்து வந்ததால் சதீஷ், அருளின் உதவியுடன் கடந்த 16ம் திகதி இரவு கொலை செய்தேன்.பின்னர் செங்கல் சூளையில் பதுங்கியிருந்த எங்களை பொலிசார் பிடித்து விட்டனர் என கூறியுள்ளார், இதனையடுத்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார் சிறையில் அடைத்தனர்.