எறும்பு கூட்டத்தின் நடுவே கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

937

தென்னாப்பிரிக்காவில் கழிவு நீர் வடிகாலில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று அதிகாலையில் Port Elizabeth பகுதியில் தமது நாயுடன் நடக்க சென்றுள்ளார் 63 வயதான Charmaine Keevy.

திடீரென்று இவரது நாய் கழுவு நீர் வடிகால் இருந்த திசையில் நோக்கி மிகவும் சத்தமாக குரைத்துள்ளது.

கேட்டரிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் Charmaine உடனடியாக நாய் குரைத்த பகுதியில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அங்கே அவர் கண்ட காட்சி நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. பச்சிளம் குழந்தை ஒன்று 6 அடி ஆழம் கொண்ட கழிவு நீர் வடிகால் ஒன்றில் எறும்பு கூட்டத்தின் நடுவே உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளது.

அதிர்ச்சியில் உறைந்துபோன Charmaine, உடனடியாக Cornie Viljoen(60) என்பவரின் உதவியுடன் குழந்தையை மீட்டுள்ளார்.

பின்னர் பொலிசாருக்கும் அம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவ உதவி குழுவினர் குழந்தைக்கு தேவையான முதலுதவிகளை உடனே அளித்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். குழந்தையின் தாயார் மற்றும் கைவிடப்பட்டதன் காரணம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.