திருவண்ணாமலை…
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சின்ன கல்லப்பாடிகிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சுரேஷ்.
சம்பவத்தன்று சுரேஷ் தனது நண்பர்கள் சதீஷ், பூமிநாதன் ஆகியோருடன் கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சிறுகாலூர் நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளிப்பதற்காக வந்தனர்.
அப்போதே சதீஷ், பூமிநாதன் இருவரும் நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்தனர்.
சுரேஷ் கரையில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தான். மேலும் சில நிமிடங்களுக்கு பிறகு சுரேஷ் குளிப்பதற்காக நீர்வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாறையில் வழுக்கி விழுந்த சுரேஷ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.
அவனை தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில்மோட்டாம்பட்டி-கூடலூருக்கும்இடையே உள்ள மணிமுக்தா ஆற்றின் கரையோரம் பாறையை ஒட்டி நின்ற மரக்கிளையில் சிறுவனின் எலும்புக்கூடு ஒன்று சிக்கியிருந்ததை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கரிகாலன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது மரக்கிளையில் சிக்கிய எலும்புக்கூடுடன் கிடந்த சட்டை மற்றும் பேண்டை அடையாளமாக வைத்து அவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சுரேஷ் என்பது தெரியவந்தது பின்னர் சிறுவனின் எலும்புக் கூட்டை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி தலைமைஅரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் 40 நாட்களுக்குப் பிறகு எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.