ஏரிக்கரையில் திடீர் பிளவு… பொதுமக்கள் அதிர்ச்சி!!

430

புத்தூர்………………….

புத்தூர் ஏரிக்கரையில் திடீர் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் மத்திய அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் எம்எல்ஏ ரோஜா ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை, திருப்பதி வழித்தடத்தில் உள்ள புத்தூர் அருகே 2006 ஆம் ஆண்டு 56 கோடி ரூபாய் செலவில் ஏரி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. மழை காலங்களில் அந்த ஏரியில் சேரும் தண்ணீரை புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் விளை நிலங்களுக்கு பாசன நீராக பயன்படுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் திடீரென்று புத்தூர் ஏரியின் கரையில் பெரிய அளவிலான பிளவுகள் ஏற்பட்டன.

இது பற்றி தகவல் அறிந்த நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரோஜா நீர்வளத் துறை அதிகாரிகளுடன் பேசி திரையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.