ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஆரஞ்சு நிறத்தில் பனிமழை !!

675

ரஷ்யா, பல்கேரியா, ரோமானியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் ஆரஞ்சு நிறத்தில் பனிமழை பெய்துள்ளது.

இது பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வட ஆப்ரிக்காவில் உள்ள பாலைவனங்களில் ஏற்படும் மணல் புயலால் பரவும் மணல் மற்றும் தூசி வளிமண்டலத்தில் தேங்குவதால் இத்தகைய நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசாவின் செயற்கைகோள் புகைப்படத்தில் வளிமண்டலத்தில் மணல் மற்றும் தூசி நிறைய இருப்பது தெரியவந்துள்ளது. இது மெடிடெர்ரேனியன் கடற்பரப்பிற்கு மேல் தேங்கியுள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மழையோ பனிபொழிவோ நிகழும் போது வளிமண்டலத்தில் தேங்கியுள்ள மணல் உடன் வருவதால் ஆரஞ்சு நிறத்தில் தெரிவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரஞ்சு நிற பனிப்பொழிவு மிகவும் அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.