ஐஸ்வர்யா ராயை ஒதுக்கிவைக்கப்படுவதற்கு காரணம் என்ன?.. வெளியே கசிந்த மற்றுமொரு ரகசியம்!!

1094

ஸ்வேதாவுக்காக ஜெயா பச்சன் மருகள் ஐஸ்வர்யா ராயை ஒதுக்குகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. ஃபேஷன் டிசைனர் அபு ஜானியின் உறவுக்கார பெண்ணான சவுதாமினி மாத்தூருக்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மும்பையில் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயா மற்றும் மகள் ஸ்வேதாவுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். ஐஸ்வர்யா ராய் தனியாக வந்து தனியாக கிளம்பியும் சென்றுள்ளார்.

அபிஷேக் பச்சன் வெளியூருக்கு சென்றதால் ஐஸ்வர்யாவுடன் வரவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் பச்சன் குடும்பத்தாருடன் இல்லாமல் நடிகை சோனாலி பெந்த்ரேவுடன் இருந்துள்ளார்.

மாமனார், மாமியார், நாத்தனார் இருந்த பக்கமே ஐஸ்வர்யா ராய் செல்லவில்லை. குறிப்பாக நாத்தனார் ஸ்வேதாவின் முகத்தில் விழிக்கக் கூடாது என்று ஒதுங்கியே இருந்துள்ளாராம் ஐஸ்வர்யா.

ஸ்வேதா நந்தா, ஐஸ்வர்யா ராய்க்கு இடையேயான பிரச்சனை முற்றிவிட்டதாம். அதனால் தான் ஒரே இடத்திற்கு சென்றாலும் ஒருவரையொருவர் தவிர்த்து வருகின்றார்களாம். மகளுக்காக ஜெயா ஐஸ்வர்யாவை ஒதுக்குவதாக கூறப்படுகிறது. ஜெயாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையேயும் பிரச்சனை என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.