ஒன்றரை வயது குழந்தைக்கு மழலையர் பள்ளியில் நடந்த கொடூரம்!!

650

நாகர்கோயிலில் உள்ள மழலையர் பள்ளியான “kids paradise ” ல் ஒன்றரை வயது குழந்தை மீது வெந்நீர் கொட்டியதால் குழந்தையின் இடுப்புக்கு கீழே மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளது

நாகர்கோயில் அருகில் உள்ள ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் நாகராஜன் பாமா தம்பதியினர். இவர்கள் மகன் துஷ்யந்த்.

கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்வதால் பாமாவே குழந்தையை பார்த்து வருகிறார். இவர் வாழ்வாதாரத்திற்காக ஒரு டைலரிங் நிறுவனத்திற்கு வேலைக்கு போகும்போது அருகில் உள்ள “KIDS PARADISE ” மழலையர் பள்ளியில் காலையில் குழந்தையை விட்டு செல்வார் மாலை பணி முடிந்து வரும்போது அழைத்து கொள்வார்.

இந்நிலையில் கடந்த புதன் அன்று குழந்தைகளுக்காக பள்ளியில் வெந்நீர் காய்ச்சப்பட்டிருக்கிறது. அப்போது எதிர்பாராவிதமாக அது கீழே கொட்டியிருக்கிறது. அது அருகில் இருந்த துஷ்யந்த் மீதும் விழுந்திருக்கிறது.

இதனால் துடித்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தைக்கான மருத்துவ செலவை பள்ளி நிர்வாகம் ஏற்பதாக கூறி இருந்த நிலையில் இன்று காலை குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போது பணம் தர நிர்வாகம் மறுத்து விட்டதாக தெரிய வருகிறது.

இதனை அடுத்து பாமா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்துள்ளார். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதற்காக இதுவரை முப்பதாயிரம் செலவு செய்திருப்பதாக பாமா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.