மதுரை…..
தமிழகத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும் கிரிக்கெட் வீரரான இவர் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் என்ற அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இந்தநிலையில் ஹரிபிரசாத்துக்கும், தேனியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்தின் போது பத்திரத்துடன் வந்த மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை சந்தித்து திருமணத்திற்கு பின்னரும் ஹரிபிரசாத்தை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிப்பது என்ற ஒப்பந்த பத்திரத்தை மணமகள் பூஜாவிடம் கொடுத்து கையெழுத்து பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு பின்னர் கணவர் பெரும்பாலும் எந்தவொரு விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கு சில மனைவிகள் சம்மதிக்காமல் தடுக்கும் சூழலில் மணமகனின் நண்பர்களின் இந்த சம்மத ஒப்பந்த பத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.