பனிமலர்…
சன் டிவியின் மூலம் அறிமுகமானவர் பனிமலர். அதன்பிறகு இவர் பாலிமர், புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 7 போன்ற அனைத்து ஊடகங்களும் பணியாற்றியுள்ளார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வரும் இவர் தொடர்ந்து பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் பனிமலரிடம் திருநெல்வேலியில் ஒரு கடை திறப்பு விழாவிற்காக அழைத்துள்ளார் மேலும் கடை திறப்பு விழாவிற்கு வரும்படி கூறியுள்ளார்.
பின்பு ஒருநாள் தங்குங்கள் ஒரு லட்சம் தருகிறேன் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்துள்ளார்.
பின்பு பனிமலர் அந்த நம்பரை பிளாக் செய்துள்ளார். மேலும் இதுபோன்று பலருக்கும் பல்வேறு விதமான கொடுமைகள் நடந்து வருவதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அந்த நபரின் மொபைல் நம்பரை பதிவிட்டு அவர் பண்ணிய மெசேஜ் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் கோழைகள்தான் இந்த மாதிரியாக சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகளை வைத்து பெண்களுக்கு மெசேஜ் செய்வார்கள் உண்மையாக இருப்பவர்கள் கோழையாக மெசேஜ் செய்ய மாட்டார்கள் என கூறியுள்ளார்.
மேலும் பெண்கள் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் எனவும் எது வந்தாலும் அதனை எதிர்த்துப் போராட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இதுக்கெல்லாம் பயந்து நம்ம வேலை செய்யாமல் இருக்க முடியாது.
அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நம் வேலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இவர்களையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது எனவும் கூறியுள்ளார்.