உக்ரைன்….
உக்ரைன் நாட்டில், கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக வெ.டி.கு.ண்.டு தா.க்.கு.தல் நடத்தி வருகிறது ரஷ்யா. இரு நாட்டு அதிபர்களும், பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் ஒரு பக்கம் வெளியாகி கொண்டிருக்க, நாளுக்கு நாள் போ.ரி.ன் தீ.வி.ரம் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, உக்ரைனிலுள்ள மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல், உ.யிர் ப.ய.த்தில் பதுங்கு கு.ழி மற்றும் மெட்ரோ சுரங்கம் உள்ளிட்ட இடங்களில், அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.
மேலும், சில உலக நாடுகளும் போ.ரி.னை நிறுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், திருமணத்தின் பெயரில் உக்ரைனில் இருந்த இந்தியர் ஒருவர், போரில் சி.க்.காமல் தப்பித்துள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போ.ர் தொ.டு.ப்பதற்கு சரியாக ஒரு நாளுக்கு முன், உக்ரைனைச் சேர்ந்த லியுபோவ் என்ற பெண், இந்தியாவைச் சேர்ந்த அவரின் நண்பர் பிரதீக் என்பவரை உக்ரைனில் வைத்து திருமணம் செ.ய்.துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, போ.ர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, பிரதீக் மற்றும் லியுபோவ் ஆகியோர், தங்களின் குடும்பத்தினர் சிலருடன், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மணமகனின் ஊரான ஹைதராபாத்திற்கு வந்துள்ளனர். அதன் பிறகு, உக்ரைனில் ரஷ்யா ராணுவம் நுழைந்து தா.க்.கு.த.லை ஆரம்பித்துள்ளது.
பின்னர், இந்தியா வந்த தம்பதியினரின் திருமண வரவேற்பு விழா, கடந்த 27 ஆம் தேதி, மிகவும் சிறப்பாக நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. பிரதீக் மற்றும் லியுபோவ் ஆகியோரின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள், இந்த கடினமான சூழலில் நடைபெற்றதால், நெ.ருங்கிய உறவினர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி, அழைக்கப்பட்டுள்ளதாக மணமக்கள் வீட்டார் தெரிவித்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சி குறித்து சிறப்பு பூஜைகள் நடத்திய குருக்கள், இந்த திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்ததாகவும், உக்ரைனில் நடைபெற்று வரும் போ.ர் விரைவில் முடிவடைந்து, உலகில் அமைதி திரும்ப வேண்டி சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போல, இந்த திருமண நிகழ்வு குறித்து, மணமக்கள் இருவரும் எதையும் பேச மறுத்து விட்டனர் என்றும் கூறப்படுகிறது. உக்ரைன் பெண்ணை திருமணம் செய்த காரணத்தினால், இந்தியாவிற்கு சரியாக போ.ர் ஆரம்பிக்க இருப்பதற்கு முன்னர் வந்த நபர், போ.ரில் சி.க்.காமல், சொந்த நாட்டுக்கு வந்த சம்பவம், பலரையும் ஆச்சரியம் அடையச் செய்துள்ளது.