ஒரே கருவில் இரட்டை குழந்தை.. ஆனால் வெவ்வேறு தந்தை : பிரசவத்தில் பகீர்!!

1660

இரட்டை குழந்தை…..

ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த விஞ்ஞான வளர்ச்சியில் நம்பித்தான் ஆக வேண்டும். பிரேசிலை சேர்ந்த 19 வயதான பெண்ணுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

குழந்தைகள் பிறந்த சந்தோஷத்தில் குதூகலமாக இருந்த பெண்ணுக்கு கூடவே அதிர்ச்சியையும் கொடுத்தது அந்த தகவல். மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளின் டிஎன்ஏவும் வெவ்வேறாக இருந்தது.

இது, அந்த பெண்ணை மட்டுமல்ல மருத்துவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆச்சரியத்தை அதிகரிக்கும் வகையில், இரண்டு வெவ்வேறு ஆண்களால் கருத்தரிக்கப்பட்டு ஒரே பிரசவத்தில் பிறந்தாலும் குழந்தைகள் மிகவும் ஒத்ததாக இருந்துள்ளன.

இதுகுறித்து மருத்துவர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம்பெண் ஒரே நாளில் இரண்டு பேரிடம் செக்ஸ் வைத்துக்கொண்ட விவரத்தை தெரியப்படுத்தினார். அதன் பிறகே இவர் கருவுற்றுள்ளார். அதில் ஒரு நபர் பெண்ணுடன் மருத்துவமனையில் இருந்துள்ளார்.

உடனே அந்த நபரின் டிஎன்ஏவை பரிசோத்தபோது ஒரு குழந்தைக்கு மட்டும் நெகட்டிவ் என வந்தது. அதன் பின்னர் இரண்டாவது ஆண் நண்பரை வரவழைத்து அவரை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது, இரண்டாவது குழந்தையின் டிஎன்ஏ ஒத்துப்போனது. அப்போதுதான் மர்மம் விலகியது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியபோது, இந்த நிகழ்வு மிகவும் அரிதானது என்றாலும், சாத்தியம் உள்ளது. அறிவியல் ரீதியாக, இது ”ஹீட்டோரோபரன்டல் சூப்பர்ஃபெகண்டேஷன்” என்று அழைக்கப்படுகிறது. ஒரே தாயிடமிருந்து இரண்டு முட்டைகள் வெவ்வேறு ஆண்களால் கருவுற்றால் இது சாத்தியமாகும்.

மில்லியனில் ஒரு பெண்ணுக்குத்தான் இவ்வாறு நிகழும் என அவர் கூறினார். தற்போது அந்த குழந்தைகளுக்கு 16 மாதங்கள் ஆகின்றன. இரு தந்தைகளில் ஒருவர் குழந்தைகளையும், இளம் தாயையும் கூடவே இருந்து கவனித்து வருகிறாராம். ஆனால், இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் ஆண்களில் ஒருவரின் பெயர் மட்டுமே சேர்க்க அந்த பெண் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.