ஒரே குடும்பத்தில்..
இந்திய மாநிலம் பீகாரில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 60 பேரில், 23 பேர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாட்னாவில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள சிவான் மாவட்டத்தில் கிட்டதட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சங்கிலி தொடரானது, கடந்த மாதம் ஓமனில் இருந்து திரும்பிய நபரால் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச்.16 ஆம் திகதி சிவான் மாவட்டத்தில் உள்ள பன்ஜ்வார் கிரமத்திற்கு திரும்பிய அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஏப்ரல் 4 ஆம் திகதியே தெரிவந்தது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் முன்பு, சிவான் மாவட்டத்திலுள்ள உறவினர்களின் வீடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் சென்று வந்துள்ளார். இதனால் உறவினர்கள் 22 பேருக்கும், அவரது சொந்த கிராமமான பன்ஜ்வாரை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களையும் சேர்த்து, சிவான் மாவட்டத்தில் மட்டும் 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 23 பேரில் 4 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவர்கள் மேலும், 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சிவான் மாவட்ட எல்லை பகுதிகள் அதிகாரிகளால் மூடக்கப்பட்டுள்ளன.