டெல்லியின் புராரி பகுதியில் 7 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 போ் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.டெல்லியின் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 பேர் வசித்து வந்துள்ளனா்.
இவா்கள் தங்கள் வீட்டு வாயிலில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தனா். தினமும் காலை 6 மணிக்கு கடை திறக்கப்படும் நிலையில் இன்று காலை 7.30 மணி வரை கடை திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினா் வீட்டின் கதவை தட்டியுள்ளனா். ஆனால், யாரும் பதில் அளிக்கவில்லை.இதனால் சந்தேகமடைந்தவா்கள் காவல் துறைக்கு தகவல் தொிவித்தனா்.
இதன் அடிப்படையில் காவல் துறையினா் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது 7 பெண்கள் உள்பட 11 பேரும் தூக்கில் தொங்கியபடி உயிாிழந்த நிலையில் மீட்கப்பட்டனா். மீட்கப்பட்டவா்களின் வாய் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அவா்கள் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனரா என்று காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.