ஐதராபாத்…..
இந்தியாவின் தெலுங்கானாவில் ஸ்ரீகாந்த் கவுட் என்ற நபர் தன்னுடைய குடும்பத்தினருடன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஐதராபாத்தின் அமீன்பூரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கவுட், இவரது மனைவி அனாமிகா, இவர்களுக்கு ஸ்னிகித்தா(வயது 7) என்ற மகள் இருக்கிறார்.
கடந்த 20ம் தேதி ஸ்ரீகாந்தின் வீடு வெகுநேரமாக பூட்டியிருப்பதை கவனித்த அக்கம்பக்கத்தினர், போலீசுக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த அதிகாரிகள் வீட்டை சோதனையிட்டதில், மூவரும் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சடலத்தை கைப்பற்றிய போலீசார், தற்கொலை வழக்கமாக பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
வீட்டை சோதனையிட்டதில், சாமி படங்கள் தலை கீழாக கவிழ்க்கப்பட்டு தரையில் கிடந்துள்ளது, மேலும் மூன்று பேரின் நெற்றியிலும் குங்குமத்தால் கோடுகள் வரையப்பட்டிருந்தன.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், ‘ஒருவேளை இந்த வீட்டில் நரபலி அல்லது அமானுஷ்ய சடங்குகள் இங்கு நடந்திருக்கலாம்” என சந்தேகம் அடைந்தனர்.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில், ஸ்ரீகாந்த் குடும்பத்தினருக்கு கடவுள் பக்தி அதிகம் கிடையாது என்பதும், தங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலே அனாமிகா நல்ல ஆலோசனைகள் வழங்குவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஸ்ரீகாந்தின் குடும்பத்தினருக்கு எந்த மூடநம்பிக்கை பழக்கமும் கிடையாது என்றும், கணவன் – மனைவி இருவருமே நன்றாக படித்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் போலீசார்.