ஈரோடு…..
ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தில் கார்த்தி – பிருந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதி 4 மாத கர்ப்பிணியாக இருந்த பிருந்தா வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட பிருந்தா முதலில் கார்த்தியை காதலித்து வந்தார். இந்த நேரத்தில் பிருந்தாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு அவரது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் அரவிந்த் (21) என்பவர் அடிக்கடி வந்து உள்ளார்.
இதனால் அரவிந்துடனும் பிருந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது. ஒரே நேரத்தில் பிருந்தா கார்த்தி, அரவிந்த் ஆகியோரை காதலித்து வந்து உள்ளார்.
இதில் கார்த்தி முந்திக்கொண்டு பிருந்தாவை திருமணம் செய்து கொண்டார். இது பற்றி தெரிய வந்ததும் அரவிந்த் அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில், கணவர் கார்த்தி வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த காதலன் அரவிந்த், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிருந்தாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அரவிந்த் பிருந்தாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு சென்னை தப்பிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து பொலிசார் தலைமறைவாக இருந்த அரவிந்தை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.