ஒரே நேரத்தில் இருவருடன் காதல்…. கொலை வழக்கில் மேலும் வெளியான பல திடுக்கிடும் தகவல்!!

931

ஈரோடு…..

ஈரோடு மாவட்டம், சித்தோடு நசியனூர் ராயபாளையம் ரோடு நெசவாளர் காலனியை சேர்ந்த சென்னியப்பன் – வளர்மதி தம்பதியின் பிருந்தா.. 23 வயதாகிறது.. இவர் கார்த்தி என்பவரை காதலித்து வந்துள்ளார்.. ஈரோடு வெட்டுக்காட்டு வலசை சேர்ந்தவர்தான் இந்த கார்த்தி. ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் இருவருமே வீட்டை விட்டு வெளியேறி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்… இதற்கு பிறகு வேறு வழியில்லாமல், பிருந்தாவின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டனர்… அனைவரும் ஒன்றாகவே ஒரே வீட்டிலேயே வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி பிருந்தாவின் பெற்றோர் தீபாவளிக்கு மொடக்குறிச்சியில் உள்ள தங்களது மூத்த மகள் மங்கையர்கரசி வீட்டுக்கு சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அதாவது 24ம் தேதியில் இருந்து, 28ம் தேதி பிருந்தாவை அக்கம்பக்கத்தினர் பார்க்கவேயில்லை..

அடிக்கடி வீட்டுக்கு வெளியே வந்துபோகும் பிருந்தா, 4 நாட்களாக ஆளையே காணோமே என்பதால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயந்தி என்பவர் வீட்டிற்குள் வந்து பார்த்தார்… அப்போது பிருந்தா சடலமாக கிடப்பதை அறிந்து அலறியடித்து ஓடினார்..

சித்தோடு போலீசுக்கும், பிருந்தாவின் பெற்றோருக்கும் தகவல் சொன்னார்.. இதையடுதது, அவர்களும் விரைந்துவந்து, சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்… உடனடியாக சந்தேக மரணம் என்றும் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கினர்.

இதற்கு நடுவில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துவிட்டது.. அதில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததால், சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையில் இறங்கினர்.. அப்போதுதான் அரவிந்த் என்பவர் பெயர் அடிபட்டது..

இவர் பிருந்தாவை முன்னாள் காதலராம்.. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர்.. 22 வயதாகிறது.. ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்த அரவிந்த், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, பிருந்தா குடியிருக்கும் காலனியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்து போவாராம்..

உறவினர் வீட்டில் உள்ள இளம்பெண்ணும், பிருந்தாவும் தோழிகள். இதன்மூலம் அரவிந்த்துக்கும், பிருந்தாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.. இந்த சமயத்தில், பிருந்தா, கார்த்தியை காதலித்து வந்தாலும், அரவிந்த்துடனும் பிருந்தாவுக்கு காதல் வந்துவிட்டது.. அதாவது ஒரே நேரத்தில் 2 நபர்களை காதலித்துள்ளார்.. அந்த நேரத்தில், அரவிந்த்துக்கு சென்னையில் உள்ள ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துவிடவும், கார்த்தியை பிருந்தா திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 27ம் தேதி பிருந்தா வீட்டுக்கு அரவிந்த் வந்துள்ளார்.. அப்போது வீட்டில் யாருமே இல்லை.. 2 பேரும் ஜாலியாக இருந்துள்ளனர்.. அந்த நேரம் பார்த்து, கார்த்தியின் போன் வந்தள்ளது.. பிருந்தாவும், கார்த்தியும் ஒரு மணி நேரம் போனில் பேசிக் கொண்டிருந்தார்களாம்.

இதை பார்த்து அரவிந்த் கடுப்பாகி விட்டார்.. வாக்குவாதமும் செய்துள்ளார்.. பிறகு, நாம் இப்போதே எங்காவது ஓடிப்போயிடலாம் என்று அரவிந்த் அழைத்துள்ளார்.. அதற்கு பிருந்தா, ஐயோ, நான் இப்போ 4 மாசம் கர்ப்பிணியாக இருப்பதால் வர முடியாது என்றாராம்.. அப்படியானால், தற்கொலை செய்து கொள்ளலாமா? என்று அரவிந்த் கேட்டாராம்..

தற்கொலை எல்லாம் செய்ய முடியாது.. வேண்டுமானால் என்னை கொன்றுவிட்டு, நீ தற்கொலை செய்துக்கோ என்று பிருந்தா சொல்லி உள்ளார்.. இதறகு பிறகு, அரவிந்த், பிருந்தாவின் கழுத்தை நெரித்து விட்டார்.. உயிர் பிரிவதையும் கண்ணால் பார்த்துவிட்டார்.. ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை.. மாறாக, அங்கிருந்து சென்னைக்கு ஓடிவிட்டார்.. பிருந்தாவின் போனை ஆராய்ந்தபோதுதான், அரவிந்த் கொலையாளி என்பது உறுதியாகி, சென்னையில் இருந்த அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துவிட்டனர்..!!