ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்… மிரள வைத்த இளம்பெண்!! வீடியோ காட்சி!!

631

ஆப்பிரிக்கா………..

தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த Halima Cisse(25) என்ற இளம்பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் 7 குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு நேற்று பிரசவ வலி ஏற்படவே, அதில் 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் என 9 குழந்தைகள் பிறந்துள்ளது.

வயிற்றில் அதிக குழந்தைகள் இருந்ததால், தாயின் உடல்நிலையைக் குறித்து கவலை கொண்ட மருத்துவர்கள் தற்போது தாயும், சேயும் ஆரோக்கியமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மாலி சுகாதாரத்துறை அமைச்சர் பாண்டா சிபி, இளம்பெண் சிஸ்ஸிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருக்கு நன்றி.

அடுத்த சில வாரங்களில் தாயும், குழந்தைகளும் சொந்த ஊர் திரும்பவுள்ளதாக கூறினார். ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் என்பது அரிதிலும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.