ஒரே வீட்டில் 11 சடலங்கள்! மரணத்திற்கு முன்… அதிரவைக்கும் டைரி குறிப்புகள்!!

1124

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வீட்டில் இறந்து கிடந்த நிலையில் அவர்கள் எழுதி வைத்த முழு டைரி குறிப்புகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது.டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

அவர்கள் வீட்டிலிருந்து பொலிசார் கைப்பற்றிய டைரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதில், சொர்க்கத்தை அடையும் வழி என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை செய்வது வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைதான் செய்ய வேண்டும்.

தற்கொலை செய்யும் போது, விளக்குகள் அனைத்தும் குறைந்த வெளிச்சத்தில் இருக்க வேண்டும். நள்ளிரவு 12 மணியில் இருந்து ஒரு மணிக்குள்தான் தற்கொலை இருக்க வேண்டும். தற்கொலை செய்யும் போது, அனைவரின் கண்களும் கட்டப்பட வேண்டும், பூஜ்ஜியத்தைத் தவிரவேறு எதையும் பார்க்கக் கூடாது

தற்கொலைக்குப் புடவை அல்லது கயிறு பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பாட்டியை தரையில் கீழே படுக்கவைத்து தற்கொலை செய்யவைக்கலாம் என்று எழுதப்பட்டுள்ளது.

இதுதவிர கடைசி நாளுக்கு முன்பு 7 நாட்கள் பூஜை செய்ய வேண்டும், சடங்குகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இதற்கு இடையில் ஆத்மா வெளியே வந்தால், உடனடியாக சாக வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் கடந்த மாதம் 26-ம் திகதி எழுதப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 30-ம் திகதி இரவு அனைவரும் கடவுளைச் சந்திக்கச் செல்கிறோம். தற்கொலை செய்யும் போது அனைவரும் நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். கைகள், கால்கள், வாய்,கண்கள் கட்டப்பட்டு இருந்தால்தான் சொர்க்கத்தை அடைய முடியும் எனவும் அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 11 பேரும் தாங்கள் இறந்தபின் தங்களுடைய கண்களைத் தானமாக வழங்கிவிடுங்கள் எனவும் எழுதிவைக்கப்பட்டுள்ளது.