கிருஷ்ணகிரி…
தமிழகத்தில் இளம் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட அரசுப்பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது அதில் பயணித்த இருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர், இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பானது.
அவர்களிடம் விசாரித்ததில், விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஷ், காஞ்சிபுரத்தை சேர்ந்த லோகேஸ்வரி என்பது தெரியவந்தது.
இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக இருவரையும் மீட்ட சக பயணிகள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.