ஓவர் நைட்டில் மாறிய ஏழையின் வாழ்க்கை : 60 வயது தாத்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

1318

கேரளா…..

கேரளாவில் தினக்கூலி வேலை பார்க்கும் 60 வயது முதியவரின் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் கோழிக்கோடு அடுத்த கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மம்மிக்கா.

60 வயதான இவர் அப்பகுதியில் தினக்கூலி வேலைகளை செய்து வருகிறார். அனைவரிடமும் சிரித்து சகஜமாக பழகும் இவர், எந்த வீட்டில் என்ன கூலி வேலையாக இருந்தாலும் முதல் ஆளாக சென்று செய்பவர்.

வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை மற்றும் தாடி என தோற்றம் கொண்ட இவரின் வாழ்க்கையை அப்பகுதி போட்டோகிராபர் மாற்றி உள்ளார். இவரின் தோற்றத்தைப் பார்த்த போட்டோகிராபர் அவரை கூப்பிட்டு மாடல் சூட் எடுக்க முடிவு செய்துள்ளார். முதலில் இதற்கு மம்மிக்கா மறுத்துள்ளார். ஆனால் தான் எடுத்த போட்டோக்களை காட்டி மம்மிக்காவை போட்டோ ஷூட்டிற்கு சம்மதிக்க வைத்துள்ளார்.

இதனை அடுத்து மம்மிக்காவிற்கு கோட் சூட், மேக் அப் போட்டு போட்டோ எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தினை பார்த்தவர்கள் ஆச்சரியத்துடன் பகிர ஆரம்பித்துள்ளனர்.

ஒரே இரவில் கேரளாவின் சூப்பர் மாடலாக மம்மிக்கா உருவெடுத்து இருக்கிறார். மாடலிங் பிடித்து போன மம்மிக்கா தற்போது கூலித்தொழில் மற்றும் மாடலிங் இரண்டையும் செய்து வருகின்றார்.