உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகளின் போது நிகழ்ந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக 7 உயிரிழந்துள்ளனர்.
வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் சாலை மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளின் போது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். மேலும் பாலத்தின் கீழ் இருந்த கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 16 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசியுள்ள உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், சம்பவ இடத்துக்கு 250 வீரர்களை கொண்ட தேசிய பேரிட மீட்பு படையினரை அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.