கட்டிப்பிடி வைத்தியம் செய்து ஆண்டுக்கு £30,000 சம்பாதிக்கும் பெண்!!

955

பிரித்தானியாவில் வசிக்கும் பெண்ணொருவர் cuddling எனப்படும் கட்டிப்பிடி வைத்தியம் செய்து ஆண்டுக்கு £30,000 சம்பாதித்து வருகிறார்.மடிலோன் குயனாசோ (50) என்ற பெண் கடந்த 2009-லிருந்து cuddle நிறுவனம் ஒன்றுக்காக வேலை செய்து வருகிறார்.

இதன் மூலம் மன அழுத்தத்தில் இருப்போர் அதிலிருந்து விடுபட்டு சமூகத்தில் அனைவருடனும் சகஜமாக பழக cuddling எனப்படும் கட்டிப்படி வைத்தியம் செய்யப்படுகிறது.

மடிலோன் பலருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்து ஒரு மணி நேரத்துக்கு £60 சம்பாதிக்கிறார். அவர் ஆண்டு வருமானம் £30,000 ஆக உள்ளது.இது குறித்து மடிலோன் கூறுகையில், எனக்கு என் பணி மனதிருப்தியை அளிக்கிறது, நான் செய்யும் பணி குறித்து தவறாக பேசுபவர்களும் உள்ளார்கள்.

அதை பற்றி எனக்கு கவலையில்லை, என் இரண்டு மகன்களான டாண்டி (19) மற்றும் ஜோஸ் (16) எனக்கு ஆதரவாக உள்ளார்கள் என கூறியுள்ளார்.