உத்தரபிரதேசம்….
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள நாக்வா கிராமத்தை சேர்ந்தவர் அல்ஹா. இவர் பிரமோத் என்பவரை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பிரமோத் கொலை செய்யப்பட்ட பின்னர், அல்ஹா தனது மைத்துனரான மனோஜ் குமாருடன் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அல்ஹா தனது வங்கிக்கணக்கில் சிறிய அளவிலான சேமிப்பு பணத்தை இருப்பு வைத்துள்ளார்.
அந்த பணத்தை தனக்கு தரும்படி அல்ஹாவிடம் அவரது கணவர் மனோஜ் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் மனோஜ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மனைவியை சுட்டதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மனைவியை சுட்டுக்கொன்ற மனோஜ் குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் தந்தையையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.