கிருஷ்ணகிரி….
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் அடுத்த சோனாரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி என்பவரது மனைவி பார்வதி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பார்வதியின் கணவர் சக்தி உயிரிழந்த நிலையில் இவருடைய இரண்டு மகன்களும் வட மாநிலத்தில் வேலை செய்து வருகின்றனர். பார்வதி சொந்த ஊரில் தினக்கூலிக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த முருகன்என்பவர் ஆசைக்கு இணங்க அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுத்த அந்த பெண் மீது ஆத்திரமடைந்த முருகன்தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பார்வதியை சரமாரியாக பல இடங்களில் குத்தியுள்ளார்.
பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், வெள்ளத்தில் கிடந்த பெண்ணை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த மத்தூர் போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பார்வதியை மீட்டு மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்தவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை வெட்டிய சம்பவம் கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.