கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

329

கர்நாடக…

சொத்து பங்கு பிரிப்பதில் பாராபட்சம் காட்டிய கணவனை கூலிப்படை வைத்து இரண்டாவது மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காமில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சிலர் தங்கள் மகிழ்ச்சிக்காக முதல் கல்யாணம், இரண்டாவது கல்யாணம், மூன்றாவது கல்யாணம் என அடுத்தடுத்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் அதுவே அவர்களின் வாழ்க்கைக்கு விபரீதமாகவும் முடிந்து விடுகிறது. இப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் கர்நாடக மாநிலம் பெல்காமில் நடந்துள்ளது.

அதாவது சொத்தில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட போட்டியில் இரண்டாவது மனைவி கணவனை ஆள் வைத்து தீர்த்துக் கட்டியுள்ளார் என்பதுதான் அது. இந்த மாதம் 15ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெல்காமை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் கூலிப் படையினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரது முகத்தில் ஸ்ப்ரே தெளித்து சரமாரியாக வெட்டியது அதில் தொட்டபொம்மன்னா ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

பின்னர் அந்த கும்பல் மின்னல் வேகத்தில் மறைந்தது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் போலிசாரையே அதிரவைக்கும் விஷயங்கள் வெளியானது. தொட்டபொம்மன்னாவுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வீடு கட்டிக் கொடுத்து அவருடன் குடும்பம் நடத்தி வந்தார் அவர்.

இதில் இரண்டாவது மனைவிக்கும் தொட்ட பொம்மன்னாவுக்கும் அடிக்கடி பண விஷயத்தில் சண்டை நடந்து வந்தது மற்ற இரண்டு மனைவிகளுக்கும் கணவர் தொட்ட பொம்மன்னா கேட்ட பணத்தை கொடுப்பதாகவும், தன்னிடம் மட்டும் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் இரண்டாவது மனைவி கிரணா கருதினார்.

இதனால் ஒரு கட்டத்தில் அவரைத் தீர்த்துக்கட்ட அவர் முடிவு செய்தார். இதனால் ஏற்கனவே பொம்மன்னாவுக்கு வணிக ரீதியாக போட்டியில் இருந்தவர்களுடன் இரண்டாவது மனைவி கிரணா கூட்டு சேர்ந்தார்.

இதனை அடுத்து பத்து லட்ச ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவி கணவர் தொட்டபொம்மன்னாவை தீர்த்து கட்டினார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து.

கணவனைக் கொலை செய்த வழக்கில் கிரணா, அவரது கூட்டாளிகள் தர்மேந்திரா மற்றும் சசிகாந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெல்காமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.