கணவனை டா என்று அழைத்த பிரபல நடிகை சோனம் கபூர்: உடனடியாக கண்டித்த தாய்!

684

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த தொழிலதிபரான ஆனந்த் அஹுஜாவை கடந்த 8-ஆம் திகதி இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் மும்பையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.இந்நிலையில் இவர்களது திருமணம் 8-ஆம் திகதி முடிந்த போதும், திருமணத்திற்கு பிறகும், சில சடங்குகளும் தொடர்ந்து நடைப்பெற்றன.

அதில் மாலை மாற்றிக் கொள்ளும் ஒருவிதமான சடங்கு நடைப்பெற்றது. அப்போது சோனம், தனது கணவருக்கு மாலை போடுகிறார். அந்த சமயம் அவரது கையில் இருந்த நீண்ட வளையல் ஆனந்தின் சட்டையில் மாட்டிக் கொள்கிறது.

அப்போது சோனம் கபூர் அவரிடம் பாபு சாரி என்று ஹிந்தியில் கூறினார். இந்தியில் பாபு என்பது டார்லிங், டா, பேபி என்று அர்த்தம். ஆனால் உடனே சோனன் கபூரின் தாய் பாபு சொல்லாதே வாங்க, போங்க என்று கூப்பிடு என்று கண்டித்ததால், சோனம் கபூர் மன்னிப்பு தெரிவித்ததுடன், இனிமேல் சொல்லமாட்டேன் என்று அம்மாவிடம் கூறியுள்ளார்.