கணவனை தோளிலும் வயிற்றிலும் சுமக்கும் ஒரு வித்தியாசமான பெண் : உலகின் பலசாலி மனைவி!!

1038

உலகின் பலசாலி மனைவி

இந்தப் பெண்ணை பார்ப்பவர்கள் உலகிலேயே நீங்கள்தான் பலசாலியான பெண் என வியந்து பாராட்டுகிறார்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை சுமப்பதை பார்த்திருக்கிறோம், அப்படியிருக்க மென்மையான ஒரு பெண், அதுவும் சில மாதங்கள் முன்புதான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு பெண்,

தன் கணவரை தோளிலும் வயிற்றிலும் முதுகிலும் சுமக்கிறார் என்பது ஆச்சரியம்தானே? நியூயார்க்கைச் சேர்ந்த Virginia Tuells(38)தான் அந்த ஆச்சரிய மங்கை, அவர் சுமக்கும் காதல் கணவர் Giovanni Perez (39).

சர்க்கஸ் ஒன்றில் இந்த அரிய நிகழ்வை நிகழ்த்திக் காட்டும் Virginia, வழக்கமான சர்க்கஸ் நிகழ்வுகளுக்கு நடுவே, தாங்கள் வித்தியாசமான ஒன்றை பார்வையாளர்களுக்கு செய்து காட்ட முடிவெடுத்ததாக தெரிவிக்கிறார். Virginiaவின் ஒற்றைத் தொடையில் தன் கையை மட்டும் ஊன்றி அவருக்கு இணையாக நேர் கோட்டில் Perez நிற்க, கூட்டம் அமைதியாகிறது.

அடுத்து தன் தோளிலும், வயிற்றிலும், முதுகிலும் தன் கணவரை தாங்கி நிற்கும் Virginiaவை மூச்சு விட மறந்து பார்க்கும் கூட்டம், காட்சி முடிந்ததும் பலத்த மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறது. காட்சி முடிந்ததும், Virginiaவுடனும் அவரது கணவருடனும் போட்டோ எடுத்துக் கொள்ள முண்டியடிக்கிறது ஒரு கூட்டம்.

தனது தொழிலில் தன்னைத்தாங்கும் மனைவிக்காக எதையும் செய்கிறார் Perez. குழந்தையை கவனித்துக் கொள்வதானாலும் சரி, அதற்கு உணவூட்டுவதானாலும் சரி, முகம் கோணாமல் மகிழ்ச்சியுடன் எதையும் செய்யும் Perez, அவள் எவ்வளவு கஷ்டப்படுகிறாள்.

சில நேரங்களில் அவளுக்கு களைப்பாக இருக்கும், உடல் வலிக்கும், அதனால் அவளுக்காக எந்த வேலையையும் செய்வது எனக்கு மகிழ்ச்சிதான் என்கிறார் அவர்.