கணவனை பிரிந்த பெண்ணை திருமணம் செய்வதாக வளைத்துப் போட்ட காவலர் : பெண் எடுத்த அதிரடி முடிவு!!

323

திருப்பூர்….

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கலைச் செல்வி 33. இவரது சொந்த ஊர் வால்பாறை ஆகும். இவருக்கும் வால்பாறையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் மதுவுக்கு அடிமையான சுப்பிரமணியம் குடித்துவிட்டு தினமும் வீடு திரும்பி மனைவி கலைச்செல்வி மற்றும் பெண் குழந்தைகளை அடித்து உதைத்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் இதனால் மனமுடைந்த பெண் கலைச்செல்வி தனது குழந்தைகளை பெற்றோர் வசம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் பெயரில் உள்ள நாச்சிபாளையம் வீட்டிற்கு தனியாளாக குடியேறியதோடு அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

மேலும் கலைச்செல்வி தனது கணவனுடன் விவாகரத்து கேட்டு திருப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கலைச் செல்வியின் வீட்டருகே வளர்ப்பு நாய் ஒன்று விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் அவிநாசிபாளையம்,

காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் சண்முகம் என்பவர் இது குறித்து விசாரிப்பதற்காக அங்கு சென்றதாகவும் அப்போது கலைச்செல்வி கணவரைப் பிரிந்து தனியே வசித்து வருவதும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் அவர் தெரிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வேறு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் தனது செல்போனுக்கு அழைக்குமாறு காவலர் கூறிச் சென்றதாகவும் பின்னர் சில நாட்கள் கழித்து கலைச்செல்வி அவரது செல்போனில் தொடர்பு கொண்ட காவலர் சண்முகம் ஒரு கட்டத்தில் நேரடியாக அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று தனியாக இருந்த கலைச்செல்விடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும்,

இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்ததாகவும் இருந்தபோதும் அப்பெண்ணை வற்புறுத்தி கட்டாயப்படுத்தியும் தான் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்றும் தலித் சமூகமான அப்பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாகவும் நாமக்கல் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்த சகோதரி ஆகியோருக்கு இது குறித்து தெரிவித்திருப்பதாகவும், சேர்ந்து ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் தனது பெற்றோருடன் கலைச்செல்வியை செல்போனில் காவலர் சண்முகம் பேச வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஒரு கட்டத்தில் கலைச்செல்வியின் கழுத்தில் தாலி கட்டி கணவன் மனைவியாக காவலர் சண்முகம் வாழ்ந்து வந்ததாகவும் தனது சகோதரியின் குடும்பத்தில் திடீரென ஏற்பட்ட பிரச்சனைக்காக கலைச்செல்வியிடம் ரூ.3.50 லட்சம் வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கலைச்செல்விக்கு தெரியாமல் காவலர் சண்முகம் அடிக்கடி அவரது செல்போனில் மறைவாகச் சென்று அடிக்கடி யாருடனோ பேசிக் கொண்டிருப்பது குறித்து சந்தேகமடைந்த கலைச்செல்வி சண்முகத்தின் செல்போனை எடுத்து பரிசோதித்துப் பார்த்தபோது அதில் பெண் காவலர் ஒருவருடன் காவலர் சண்முகம் மணிக்கணக்கில் காதல் ரசம் சொட்டச் சொட்ட பேசியது தெரிய வந்ததால், கலைச்செல்வி காவலர் சண்முகத்திடம் இதுகுறித்து கேட்டு சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து காவலர் சண்முகம் வீட்டை விட்டு வெளியேறி பல்லடம் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கிக்கொண்டு கலைச்செல்வியை சந்திப்பதை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி காவலர் சண்முகத்தின் செயல் குறித்து மாவட்ட எஸ்பி முதல் பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் வரை கடந்த 2 வருடங்களாக புகார் அளித்து வந்த நிலையில் கலைச்செல்வியிடம் வாங்கிய பணத்தை மட்டும் சண்முகத்திடமிருந்து போலீசார் மீட்டு கொடுத்ததோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் கலைச்செல்வியை ஏமாற்றி பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஜாதியை காரணம் காட்டி நடுத்தெருவில் நிற்கதியாய் தவிக்க விட்டு மற்றொரு காவலரான விக்னேஷ் என்பவர் மூலம் மிரட்டலும் விடுத்திருக்கிறார்.

தனது பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறும் சண்முகம் அவரது நண்பர் மற்றும் சண்முகத்தின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனுக்களை அனுப்பி வைத்துள்ள கலைச்செல்வி,

இதுகுறித்து வெளியே புகார் தெரிவித்தால் உல்லாசமாக இருந்தபோது தனது செல்போனில் எடுத்து வைத்திருக்கும் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டு,

அப்பெண்ணின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக காவலர் சண்முகம் மிரட்டல் விடுத்து வருவதாகவும் தற்போது இது குறித்து மகளிர் ஆணையம் மற்றும் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு முதல் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வரை புகார் தெரிவித்து இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட தனக்கு நீதி வழங்க வேண்டும் என பெண் கலைச்செல்வி கேட்டுக்கொண்டுள்ளார்.