கணவனை பிறந்த நாளன்று மனைவி கொலை செய்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

459

கேரள….

கேரள மாநிலம் இடுக்கி கட்டப்பனை பகுதியை சேர்ந்த ரஞ்சித். இவரது மனைவி அன்னலட்சுமி. பிறந்த நாளான கடந்த 6-ம் தேதி கணவன் ரஞ்சித் மர்மான முறையில் வீட்டிற்கு அருகில் இறந்துகிடந்தார். இதனையறிந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்து கிடந்த ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மனைவி அன்னலட்சுமி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த தெரிவித்த போலீசார், ரஞ்சித் தினமும் குடித்துவிட்டு மனைவியை தொல்லை செய்து வந்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி அன்னலெட்சுமி ரஞ்சித்தின் தலையில் மரக்கட்டையால் அடித்து உள்ளார். இதனால் மயக்கமடைந்த அவரை அருகில் கிடந்த ஒரு கொடியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் உடலை வீட்டுக்கு பின்புறம் போட்டுவிட்டு எதுவும் தெரியாதது போல் அன்னலட்சுமி இருந்துள்ளார்.

இந்த நிலையில் அன்னலட்சுமியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் தொல்லை செய்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.