கணவனை பெட்ரோல் குண்டு வீசி கொன்ற பெண் : திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்!!

285

திருவண்ணாமலை….

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மருசூர் என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சுந்தரமூர்த்தி கடந்த 2009 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆரணி தாலுகா போலீசார் சுந்தரமூர்த்தி கொலை தொடர்பாக அவரது மனைவி செந்தாமரையை கைது செய்தனர்.

அப்போது விசாரணையில் தெரிய வந்ததாவது; சுந்தரமூர்த்திக்கும் செந்தாமரையின் அக்காவுக்கும்தான் முதலில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால், செந்தாமரையின் அக்கா வேறொரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டதால் அவசர கதியாக மிகவும் சின்ன வயதான செந்தாமரைக்கு சுந்தரமூர்த்தியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமண வாழ்க்கைக்கு பிறகு சுந்தரமூர்த்தியுடன் விருப்பம் இல்லாமல் வாழ்ந்து வந்த செந்தாமரைக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த மதியழகனுடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. கணவன் சுந்தரமூர்த்தியுடன் வாழ்ந்துகொண்டே மதியழகனுடன் அவ்வப்போது செந்தாமரை உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் சுந்தரமூர்த்திக்கு தெரிந்ததும் மனைவியின் தகாத உறவுக்கு தடையாக இருந்துள்ளார் சுந்தரமூர்த்தி.  இந்நிலையில் செந்தாமரை மதியழகனுடன் சேர்ந்து கணவன் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துள்ளார்.

இதனால் இருவரும் கைதான நிலையில் இந்த வழக்கு ஆரணி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்து கடந்த பத்து ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர்.

இதனால் நீதிமன்றம் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கரணை அருகே பதுங்கியிருந்த இருவரையும் பிடித்து கைது செய்த ஆரணி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.