கணவன் இறந்த சில மணிநேரத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்! சோக சம்பவம்

954

பஞ்சாப் மாநிலத்தில் கணவன் இறந்த சில மணிநேரத்தில் கர்ப்பிணி மனைவி இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முஃடீசர் மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதன்போது, 9 மாத கர்ப்பிணியான பெண் வீட்டில் கணவன் மற்றும் 2 மகள்களுடன் உறங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தாகம் எடுத்ததால் தண்ணீர் குடிக்க அறையை விட்டு கர்ப்பிணி பெண் வெளியே வந்தார். அறையை விட்டு வெளியே வந்த சில நொடிகளில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், கணவன் மற்றும் 2 மகள்களும் உயிரிழந்தனர்.

இதனைப்பார்த்த அதிர்ச்சியடைந்த அப்பெண்ணுக்கு திடீரென வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதித்ததும் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.