கணவன் செய்த கொடுமையான செயல்: தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவி!!

946

இந்தியாவில் கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியை சேர்ந்தவர் பவன் சந்தல். இவர் மனைவி ரஜினி சந்தல் (35).ரஜினி சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து பவன், ரஜினியை கொடுமைப்படுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக ரஜினியின் தந்தை சுமேஷ்குமார் பொலிசில் புகார் செய்தார்.

அந்த புகாரில், நான் ஹிமாச்சல் பிரதேசத்தில் வசித்து வரும் நிலையில் என் வீட்டுக்கு சென்றுவிடும் படி ரஜினியை பவன் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார்.

இதோடு பணமும் கேட்டு அவர் கொடுமைப்படுத்திய நிலையில் சமீபத்தில் 1 லட்சம் பணம் கொடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.இதனிடையில் ரஜினியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.சுமேஷ்குமாரின் புகாரையடுத்து பொலிசார் பவனை கைது செய்துள்ளனர்.