பாலை ஊற்றிய மனைவி……
புதுச்சேரியில் சந்தேக கணவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் பாலை மனைவி ஊற்றிய சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(38).
மீனவரான இவருக்கு கவிதா என்ற 35 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கவிதா குடும்ப பி ரச்சனை காரணமாக, கணவர் பாண்டியனை பிரிந்து, குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
ஊரடங்கு காரணமாக, வேலை இல்லாமல் வீட்டில் இருந்த பாண்டியன், கவிதாவிற்கு போன் செய்துள்ளார். அப்போது மனைவி, என் சகோதரியிடம் பணம் வாங்கி தருகிறேன், சொந்தமாக படகு வாங்கி தொழில் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். பணம் வாங்க நேற்று முன்தினம்,
கவிதாவின் சகோதரி சரசு வீட்டிற்கு பாண்டியன் சென்ற போது அவரிடம் சரசு, மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறியுள்ளார். அதற்கு பாண்டியன், கவிதா வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்துள்ளார். முதலில் அவருக்கு புத்தி சொல் என்று கூறிவிட்டு பணத்தை வாங்கி சென்றுள்ளார்.
தன்னை வேறு ஒரு நபருடன் தொடர்புபடுத்தி பேசியது குறித்து கவிதாவுக்கு தெரியவர, பாண்டியன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, ஆ த்திரத்தில் கொதிக்க வைத்த பாலை, அவரின் பிறப்புறுப்பில் ஊற்றியுள்ளார்.
இதனால் வ லியால் து டித்த பாண்டியன், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கவிதா மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.