கணவர் இதய நோயாளி : கஷ்டப்படும் சூழலிலும் நெகிழ வைத்த பெண்ணின் உதவி!!

581

நெகிழ வைத்த பெண்..

கேரளாவில் தான் வளர்த்து வந்த ஆட்டை விற்று முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கொரோனா வைரசை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக கேரளா முதல்வர் பினராஜி விஜயன் அறிவித்துள்ள நிலையில் படிப்படியாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கஷ்டப்படும் சூழலில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சுபைதா என்ற பெண் முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை கொடுத்துள்ளார்.

தினந்தோறும் செய்திகளை பார்த்து வந்த சுபைதாவுக்கு தானும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

இருப்பினும் ஊரடங்கு உத்தரவால் சுபைதா டீக்கடையையும் திறக்கவில்லை, கணவரும் இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் தான் வளர்த்த ஆட்டை ரூ 12,000க்கு விற்று, அதிலிருந்து கடை வாடகை, மின்சார பில்கள் தவிர ரூ5510 ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் சுபைதா ஒப்படைத்தார்.

தன்னுடைய குடும்பமே கஷ்டப்படும் சூழலில் சுபைதாவின் இந்த உதவியை கேரள முதல்வர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.