தமிழ்நாட்டில் பைக் மீது காரை ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவருக்கு சுமதி (28) என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர்.
மணிகண்டனின் தாயார் ராஜம்மாளின் தம்பி ஜெயக்குமார். இவரது மகன் வசந்தகுமார் (31). கோவையில் போர்வெல் லொறி டிரைவராக வேலை செய்யும் வசந்தகுமாருக்கு திருமணம் ஆகவில்லை.
இவர், அடிக்கடி ஊருக்கு வந்து செல்வதோடு, மணிகண்டன் உறவினர் என்பதால் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வார்.
அப்போது மணிகண்டன் மனைவி சுமதிக்கும், வசந்தகுமாருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வசந்தகுமார், சுமதிக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த தவறான உறவு வேண்டாம் என மணிகண்டனை சுமதி கண்டித்த நிலையில் சில மாதங்களாக கள்ள உறவை சுமதி விட்டுள்ளார்.
இதையடுத்து செலவுக்கு மட்டும் நான் வேண்டுமா? இப்போது நான் தேவையில்லையா என சுமதியிடம் வசந்தகுமார் கேட்டுள்ளார்.
இந்நிலையில் வசந்தகுமாரின் சகோதரிக்கு இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் அதில் கலந்து கொள்ள மணிகண்டனும், சுமதியும் பைக்கில் நேற்று சென்றுள்ளனர்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த வசந்தகுமார் மணிகண்டனையும், சுமதியையும் சேர்ந்து பார்த்த ஆத்திரத்தில் வேகமாக அவர்கள் மீது காரை மோதியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே கணவர் கண்முன்னால் சுமதி உயிரிழந்தார். மணிகண்டன் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காரை ஏற்றி கள்ளக்காதலியை கொன்ற வசந்தகுமார் அங்கிருந்து நேராக காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.