கண்ணை மறைத்த காதல் : தூங்கிக்கொண்டிருந்த தாய்க்கு காதலனுடன் மகள் சேர்ந்து செய்த கொ.டூரம்!!

451

பச்சன் லோத்…

தனது காதலருடன் சேர்ந்து பெற்ற தாயை மகள் கொ.லை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் சதர் கோட்வாலியைச் சேர்ந்த ஹுசைன் நகரில் வசிக்கும் பச்சன் லோத்(50). டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகின்றார்.

இவரது மனைவி பாப்பி(45), 16 வயது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவரது மகள் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞரான அயூப் என்பவருடன் பழகி வந்துள்ளார்.

நான்கு ஆண்டுகளாக பழகிவந்த நிலையில், இவர்களின் காதல் தாய் பாப்பிக்கு தெரியவந்த நிலையில் மகளை கண்டித்ததோடு, வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

குறித்த விடயத்தினை தனது காதலர் அயூப்பிடம் கூற இருவரும், தாய் பாப்பியை கொ.லை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதன் படி கடந்த புதன்கிழமையன்று தாய் தூங்கிக் கொண்டிருந்த தருணத்தில், மகளும் அவரது காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொ.லை செய்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணையில், இறந்த பெண்ணின் மகளின் செல்போனை பொலிசார் ஆய்வு செய்த போது காதலனுடன் சேர்ந்து கொ.லை செய்துள்ளதை கண்டுபிடித்த நிலையில், பொலிசார் கைது செய்துள்ளனர்.