கனவால் பெற்ற மகளை நரபலி கொடுத்த கொடூரத் தாய் : மூடநம்பிக்கையால் நேர்ந்த கதி!!

1029

ராஜஸ்தான்….

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை அடுத்துள்ள அந்தா டவுனில், ஷிவ் காலணியில் வசித்து வருபவர் ரேகா கணவர் ஹடா. இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில், ஒரு மகன், மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மூவரும் அந்த பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று, 12 வயது மகளை இவர் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். இதனை இவரது மகன் தெரிவிக்க, உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரேகாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ரேகா, தனது மகனுக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதாகவும், அதை போக்க வேண்டுமென்றால் தனது மகளை நரபலி கொடுக்க வேண்டும் என்று தனக்கு கனவு வந்ததாகவும், அதனால் தான் தனது மகளை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

மேலும் தொடர்ந்து ரேகாவின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டதில், ரேகாவுக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர் ஏற்கனவே அவரது கணவரை கொல்ல முயற்சி செய்ததும் தெரியவந்தது.

அதோடு சம்பவத்தன்று தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மகன் மற்றும் மகள் இருவரையும் கொல்ல முயற்சித்ததும், அதில் மகன் தப்பியோடி அக்கம்பக்கத்தினரிடம் சம்பவத்தை கூறியதும், இதனிடையே தான் அவர் மகளை கழுத்தை நெரித்து கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரேகா மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவருக்கு சில நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உதார்விட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.