கன்னியாஸ்திரியை மிரட்டி 13 மூறை சீரழித்த மதத்தலைவர்: கேரளாவை உலுக்கிய சம்பவம்!!

918

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில் கன்னியாஸ்திரி ஒருவரை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது அவர் கொடுத்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் கோட்டயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கன்னியாஸ்திரி அளித்துள்ள புகாரில், முதன் முதலாக 2014-ஆம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார் பிஷப் பிராங்கோ.

தொடர்ந்து இதே போன்று மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சர்ச் நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் இதுவரை நடவடிக்க எடுக்கவில்லை என்பதாலேயே தற்போது காவல்துறையில் புகார் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,கன்னியாஸ்திரிக்கு எதிராக பிஷப் முல்லாக்கலும் புகார் அளித்துள்ளார்.

குறிப்பிட்ட பகுதியில் இருந்து அவரை இடமாற்றம் செய்தோம். அதற்கு பழிவாங்குவதற்காக அடிப்படை ஆதாரம் இல்லாத இந்தப் புகாரை தெரிவித்துள்ளனர் என்று பிஷப் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கோட்டயம் காவல்துறை அதிகாரி ஹரிசங்கர் கூறுகையில், இருவரும் மாறி மாறி புகார் அளித்துள்ளதால், இதுகுறித்து குரவிலங்காடு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும் புகார் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு துணை காவல்கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள ஒரு உயரதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.