சமூக வலைதளங்களில் தன்னை குறித்து வரும் சர்ச்சை கருத்துக்களுக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கமலஹாசன் எனக்கு ஆதரவு தெரிவிக்காதது வருத்தம் அளிப்பதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளத்தில் தான் பதிவு செய்யும் கருத்துகளுக்கு எதிர்வினையான கருத்துக்கள் வருகிறது என்பதால், இதுகுறித்து பொலிசில் புகார் அளிப்பேன் எனவும் நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
அரசியலில் இருப்பதால் என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ள அவர். மேலும், கடந்த சில மாதங்களில் சமூகவலைதளத்தால் எனக்கு பிரச்சனைகள் இருக்கிறது என்பது திரைத்துறையினருக்கு தெரியும்.ஆனால், எனக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. நடிகர் சங்கமும் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை.
குறிப்பாக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் வெளிய போறப்போ, உங்களுக்கு என் சப்போர்ட் எப்போதும் உண்டுன்னு கமலஹாசன் சார் சொன்னார். அவர் எங்க குடும்பத்துக்கு நெருக்கமானவரும்கூட ஆனால், இதுவரை அவர்கூட என் பிரச்சனை குறித்து கேட்கவில்லை.
எல்லோருக்கும் அவங்கவங்க தனிப்பட்ட நலன்தான் பெரிசா இருக்கு. மத்தவங்க பிரச்சனைக்கு குரல் கொடுக்க முன்வருவதில்லை என கூறியுள்ளார்.