விழுப்புரம்…..
விழுப்புரம் அருகே உள்ள வடமருதூரை சார்ந்த கூலித்தொழிலாளியான ஜெயமூர்த்தி என்ற இளைஞரும் அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை ஜெயமூர்த்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் பள்ளி மாணவி 6 மாத கர்ப்பமாகியுள்ளார்.
மாணவி கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவரே அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவியிடம் விசாரித்த போது ஜெயமூர்த்தி என்ற இளைஞரை காதலிப்பதாகவும் கர்ப்பத்திற்கு அவர்தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளைஞர் மீது புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் விழுப்புரம் மகளிர் போலீசார் விசாரனை செய்து பனிரெண்டாம் வகுப்பு மாணவியை 6 மாதம் கர்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.