கர்ப்பிணியான தம்பி மனைவி மற்றும் குழந்தையை கொன்று எரித்த அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

328

திண்டுக்கல்…

தமிழகத்தில் தம்பி மனைவி மற்றும் அவரின் குழந்தையை கொன்று எரித்த அண்ணனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையூர் வலசு பகுதியைச் சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவருக்கு கருப்பையா, சிவகுமார் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை.

சிவக்குமாருக்கு அஞ்சலை(21) என்பவருடன் திருமணம் நடந்து அவர்களுக்கு இரண்டரை வயதில் மலர்விழி என்ற பெண் குழந்தை உள்ளது. அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று சிவகுமார் புளியம்பழம் வியாபாரம் செய்வதற்காக வெளியூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மாலை அஞ்சலை, அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு விறகு வெட்ட சென்ற கருப்பையா அஞ்சலையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்திருக்கிறார்.

அப்போது அஞ்சலை பயந்து சத்தம் போட்டுள்ளார். இதில் பதட்டம் அடைந்த கருப்பையா, அஞ்சலையை அரிவாளால் வெட்டி கொலை செய்தவிட்டு, அவரின் இரண்டரை வயது பெண் குழந்தையையும் கொலை செய்து தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததில் கருப்பையா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.