கர்ப்பிணி ஆட்டை வன்கொடுமை செய்து கொன்ற நபர் : பேரதிர்ச்சியில் ஹோட்டல் ஊழியர்கள்!!

292

கேரளா…

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் பிரபல ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 5ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஹோட்டல் காம்பவுண்டில் சத்தம் கேட்கவே, ஹோட்டல் ஊழியர்கள் எழுந்து வந்து பார்த்துள்ளனர்.

அப்போது தொட்டியில் கட்டப்பட்டிருந்த கருவுற்ற ஆடு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் சுவர் எகிறி குதித்து ஓடுவதையும் பார்த்து ஹோட்டல் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் ஹோட்டலின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில்,

சுவர் எகிறி குதித்து ஓடிய நபர் அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் செந்தில் என்பது தெரிய வந்தது. அவர் தமிழகத்தின் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர். இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கருவுற்ற ஆட்டின் உடலை ஆய்வு செய்தபோது, ஆட்டின் பின்புறம் ரத்த கசிவு ஏற்பட்டு அந்த பகுதி சேதமடைந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் ஆட்டை உடற்கூறாய்வுக்காக அனுப்பினர். அதில், ஹோட்டல் ஊழியர் செந்தில் கருவுற்ற ஆட்டை பலாத்காரம் செய்து கொன்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அவரை பிடித்து கைது செய்த போலீசார் செந்தில் மீது விலங்குகளை துன்புறுத்துவது, இயற்கைக்கு மாறான உறவு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஹோட்டல் ஊழியர் செந்தில் இந்த ஹோட்டலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.