தெலுங்கானா….
தெலுங்கானா மாநிலம் கனகல் பகுதியில் உள்ள சேரலா கவுராரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஆட்டு கறி வாங்கி வந்துள்ளார். அதனை மனைவியிடம் சமைத்து தரும் படி அதிராகமாக கேட்டதாக கூறப்படுகிறது. அதிலும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கணவன் குடித்து விட்டு வருவதை தாங்க முடியால் இருந்த மனைவி, மறுபடியும் கணவர் நவீன் குடித்து விட்டு வந்ததால், மனைவி ஆத்திரம் அடைந்துள்ளார். குடிக்க வேண்டாம் என எத்தனை தடவ சொல்றது.. கேக்க மாட்டிங்களா என கேட்டு மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதையெல்லாம் காதில் வாங்காத நவீன் தனக்கு கறி குழம்பு தான் முக்கியம் என நினைத்து.. ஏதேதோ சொல்லி மனைவியை சமாதானம் படுத்த முயன்றுள்ளார். அதற்கு அசராத மனைவி கறியை சமைத்து தர மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கணவர்.. எனக்கா கறி குழம்பு சமைத்து தர மாட்டேங்கிற.. இரு உன்ன வச்சிக்கிறேன் என மிரட்டி உள்ளார். ஆனால், மனைவி எதற்கும் அஞ்சாமல் ‘என்ன வேண்டும் என்றாலும் பண்ணிக்கோ’ என கூறி விட்டார்.
இதையடுத்து.. குடிபோதையில் தட்டு தருமாறி phone-னை எடுத்த கணவர், 100-க்கு கால் பண்ணி.. சார் என் மனைவி கறி குழம்பு வச்சிதரமாற்றுக்கா.. இப்போது வீட்டில் தான் இருக்கிறார்.. வந்திங்கனா தூக்கிடலாம் என துப்பு கொடுத்துள்ளார்.
ஆனால், போலீசார் இந்த போன் காலை பெரிதாக எடுக்கவில்லை.. ஏனென்றால் “கறி குழம்பு வச்சிதறலனு ” யாராச்சும் போன் பண்ணுவாங்களா.. யாரோ சும்மா போன் பண்ணிருப்பாங்க என நினைத்த போலீஸார் முதலில் இந்த அழைப்பை துண்டித்துள்ளனர்.
ஆனால், குடிபோதையில் இருந்த நவீன் விடாமல் 100 – க்கு போன் செய்துள்ளார். பொதுமக்களின் அவசர தேவைக்காக இயங்கி வரும் இந்த எண்ணிலிருந்து இது போல் ஒரு நபர் பேசியது போலீஸாரின் பொறுமையை இழக்க செய்தது. இதை கண்ட மனைவி Mind வாய்ஸ்: “குடிகாரன் எதிலையோ வசமா சிக்க போறான்”.
இதையடுத்து அவரது போன் எண் மூலம் வீட்டு முகவரியை கண்டு பிடித்த போலீசார், நவீன் வீட்டிற்கு நேரடியாக சென்று விட்டனர். போலீசை பார்த்ததும் நவீன்.. நம்ம கொடுத்த புகாருக்கு தான் தனது மனைவியை கைது செய்ய போலீஸ் வந்துருக்காங்க என்று நினைத்துள்ளார்.
போலீசும் போன் பண்ண நபர் யார் என்று கேட்டறிந்தனர். அப்போதுதான் நவீன் போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை வீட்டிலேயே விட்டு சென்ற போலீசார், மறுநாள் காலை வந்து நவீனை கொத்தாக தூக்கி சென்றனர். இதில் நைட் நடந்தது எல்லாம் நவீனுக்கு நினைவிருக்கிறதோ.. இல்லையோ.. தெரியவில்லை!!