கலெக்டர் பி.ஏ என்று தம்பதிகள் செய்து வந்த செயல்: அ.திர்ச்சியூட்டும் ச.ம்பவம்!!

275

ரெஜினா…

தஞ்சாவூரில் உள்ள பிரபல மருத்துவமனைகள் மற்றும் ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பெரு நிறுவனங்களை போனில் தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் பேசுவதாக கூறி கொரோனா பணிகளுக்கு அவசரமாக கூடுதல் நிதி தேவைப்படுகின்றது,

அதனால், தான் சொல்கிற வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் அனுப்பி வையுங்கள் என்று கூறி 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் நிதி வசூல் செய்துள்ளார்.

இந்த தகவல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்துக்கு வந்ததும், அவர் இது தொடர்பாக விசாரிக்க தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தனிப்படை அமைத்து அந்த பெண் பணம் கட்ட சொன்ன வங்கி கணக்கு விவரங்களை சேகரித்த போது அது பியூட்டி பார்லர் நடத்தும் ரெஜினா என்ற பெண்ணுடையது என்று தெரியவந்துள்ளது. ரெஜினாவை பிடித்து விசாரித்த போது லொடுக்கு பாண்டி மோசடி தம்பதியின் மற்றொரு மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

ரெஜினாவை சில தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்த சென்னையை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்த சந்தானபாரதி – ரீட்டா தம்பதியர், தாங்கள் சொந்தமாக திரைப்படம் தயாரித்து வருவதாகவும், அதற்கு மேக்கப் பணிகளை மேற்கொள்வதற்காக 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரெஜினாவை புக் செய்துள்ளனர்.

அதன்படி ரெஜினாவின் வங்கி கணக்கில் பணம் வந்ததும் அவருக்கு 20 ஆயிரம் ரூபாயை சம்பளம் என்று கூறிவிட்டு மீதம் உள்ள தொகையை அந்த தம்பதி பெற்றுச்சென்றது தெரியவந்தது.

இதேபோல மீண்டும் அதே வங்கி கணக்கிற்கு பணம் வந்தால் தவறுதலாக அனுப்பி விட்டோம் என்று கூறி பணத்தை பெற்றுச்செல்ல திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட போலி பி.ஏ வசூல் ராணி ரீட்டாவையும், மோசடிக்கு திட்டம் வகுத்து கொடுத்த அவரது கணவர் சந்தானபாரதியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில் சதுரங்க வேட்டை படத்தை பார்த்து எளிதாக பணம் சம்பாதிப்பதற்காக இந்த மோசடிக்கு திட்டமிட்டதாக அந்த மோசடி தம்பதி வாக்குமூலம் அளித்துள்ளது. உண்மையில் இந்த தம்பதி, நந்தா படத்தில் வரும் லொடுக்குபாண்டி பாணியில் போன் மூலம் மோசடிக்கு வலை விரித்து போலீசில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சியரின் பெயரில் பணம் வசூல் செய்தவர்களை உடனடியாக கைது செய்தது போல, முகநூலில் போலி கணக்குகள் மூலம் ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்துவரும் மோசடி கும்பலை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.