கள்ளக்காதலனுக்காக 16 வயது மகளை பலியாக்கிய தாய் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

303

கன்னியாகுமரி….

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது மனைவி சுனிதா மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயதான மகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான ராமசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் முதுகு தண்டுவட பிரச்சனையால் படுத்த படுக்கையாகி வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

ராமசாமி முடங்கிய நிலையில் குடும்ப வறுமையால் அவரது மனைவி சுனிதா புதுக்கடை பகுதியில் ராஜையன் என்பவர் நடத்தி வரும் பர்னிச்சர் கடையில் வேலைக்காக சென்றுள்ளார். இதில் ராஜையனுக்கும் சுனிதாவும் மிகவும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுனிதாவின் 16 வயது மகள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும், தன்னை காப்பாற்றுமாறும், தான் தன் தோழியின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளதாகவும் கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.

உடனடியாக விசாரணையில் இறங்கிய குழந்தைகள் நல அலுவலர்கள் அந்த சிறுமியை அவரது தோழியில் வீட்டில் இருந்து மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது தாய் சுனிதா தான் வேலை பார்க்கும் பர்னிச்சர் கடை உரிமையாளர் ராஜையனுடன் நெருங்கி பழகி வந்ததாகவும்,

வாரம் தோறும் ஞாயிற்று கிழமை தனது வீட்டிற்கு வரும் அவர் தாயுடன் தனிமையை கழிந்து வந்ததாகவும், கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி ஞாயிற்று கிழமை வீட்டிற்கு வந்த ராஜையன் தனது தாய் இல்லாததால் தன்னை அறைக்குள் அழைத்து சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார்.

மேலும் சம்பவம் குறித்து தாயிடம் கூறிய போது தாய் “அங்கிளுக்கு உன்மேல் ஆசை அட்ஜெஸ் பண்ணிக்கோ” என்று கூறியதோடு வெளியே சொல்லாதே என்றும் கண்டிதுள்ளார்.

இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களாக ஞாயிற்று கிழமை தோறும் வீட்டிற்கு வரும் ராஜையன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும், வெளியில் சொல்ல முடியாமல் பயத்திலேயே இருந்த நிலையில் தோழியிடம் கூறியபோது, அவரது அறிவுறுத்தல் பேரில் தங்களை தொடர்பு கொண்டதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியை மீட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பியூலா பெல் ஜெனிதா சிறுமியை ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு சம்பவம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த ராஜையன், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் சுனிதா ஆகியோர் மீது போக்ஸ்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நாகர்கோவில் மகிழா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு தாயே உடந்தையாக இருந்து தற்போது சிறை சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.