ராமநாதபுரம்…
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரவி – பாக்கிய தம்பதி. இவர்களது மகள் பவித்ராவை உச்சிப்புளியில் உள்ள இளைஞர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் சேர்ந்து வாழாத பவித்ரா கடந்த சில ஆண்டுகளாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நீண்ட நாட்களாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த பவித்ராவுக்கு, இடையர் வலசை பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், முருகானந்தம் ஆர்.காவனூரில் உள்ள பவித்ராவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இச்சம்பவம் பவித்ராவின் தந்தை ரவிக்கு தெரியவர, பவித்ராவை அழைத்து அறிவுரை கூறியதோடு, இனி இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
அதனை மீறியும் பவித்ரா முருகானந்தம் இடையேயான உறவு தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த ரவி, மனைவி பாக்கியம் மற்றும் பவித்ராவை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பவித்ரா தனது தாய் பாக்கியம் மற்றும் கள்ளக்காதலன் முருகானந்ததுடன் இணைந்து மார்ச் 8-ம் தேதி இரவு 11 மணிக்கு தூக்கிக்கொண்டிருந்த ரவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடியதாக கூறப்படுகிறது.
கொளுந்துவிட்டு எரிந்த தீயில் அலறியபடி கூச்சலிட்ட ரவியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் 108 ஆம்புலன்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், தீயை அணைத்து காயங்களுடன் மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மார்ச் 9-ம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தர்.
ரவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் முருகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் பஜார் காவல்நிலைய போலீசார், ரவியின் மனைவி மற்றும் மகளை அழைத்து கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டனர்.
பின்னர், பவித்ரா, பாக்கியம், முருகானந்தம் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் பிரச்சனைக்கு மூல காரணமான நாயகி பவித்ரா உடல்நிலை சரியில்லை எனக்கூறிவிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.