கள்ளக்காதலனை மறக்க சொன்ன கணவன் : மனைவி எடுத்த முடிவு!!

1224

கோயம்புத்தூர்…..

கோயம்புத்தூர் மாவட்டம் காட்டூரைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி கணவர் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவரது கணவர் சமையல்காரர் என்பதால், அடிக்கடி சமையல் வேலைக்காக வெளியூர் செல்வது வழக்கம்.

இந்நிலையில் இளைஞர் ஒருவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த உறவு பின்னர் கள்ள உறவாக மாறியுள்ளது. கணவன் வேலைக்கு வெளியே செல்லும் நேரங்களில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வந்ததும் அவர் மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால் அதை மீறி அந்தப் பெண் வாலிபருடன் தொடர்ந்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்.

எல்லை மீறிய மனைவியிடம், கணவர் கள்ளக்காதலனை மறந்து விட வேண்டும் என கண்டித்துள்ளார். அதை செய்ய மறுத்திருக்கிறார் மனைவி. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரத்தில் கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.