கள்ளக்காதலியுடன்..
திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் கணவரை சேர்த்து வைக்க கோரி நான்கு வயது குழந்தையுடன் பட்டதாரி பெண் கண்ணீர்மல்க புகார் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் செலந்தம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் ராகினி தம்பதியரின் மகள்தான் பாஞ்சாலை (32) இவர் பருகூர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிகவியல் மற்றும் ஆசிரியர் பட்ட படிப்பு முடித்துள்ளார். இவருடைய பெற்றோர்கள் இறந்த நிலையில்
இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருப்பத்தூர் அடுத்த நத்தம் காலனி பகுதியை சேர்ந்த தன்ராஜ் மகன் ராஜசேகர் (32) என்பவருடன் திருமணம் நடைபெற்று நான்கு வயதில் மூளை வளர்ச்சி குன்றிய மகன் இருக்கிறார்.
இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த வேறொருவர் மனைவியான சிவரஞ்சனி (28) என்பவருடன் சுமார் 5 வருடங்களாக ராஜசேகருக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ராஜசேகரும் சிவரஞ்சினியும் ஊரை விட்டு ஓடி விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகார் அளிக்கப்பட்டு ராஜசேகரையும் மனைவியான பாஞ்சாலியையும் ஒன்றாக சேர்த்து வைத்து அனுப்பியுள்ளனர்.
அதன் பின்னர் திரும்பவும் மனைவியான பாஞ்சாலியை விட்டு ராஜசேகர் கள்ளக் காதலியான சிவரஞ்சினியுடன் திரும்பவும் ஊரை விட்டு ஓடிவிட்டார். இதன் காரணமாக மூளை வளர்ச்சி குன்றிய தனது நான்கு வயது குழந்தையுடன் பாஞ்சாலை தனது கணவனுடன் திரும்ப சேர்த்து வைக்க கோரி திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் மனுவை அளித்துவிட்டு சென்றுள்ளார்.
கணவன் ஒடிவிட்ட நிலையில் 8 ஆண்டுகளாக தவம் கிடந்த பெற்ற மகனின் பசியாற்றவே கஷ்டப்படுவதாக கூறும் பாஞ்சாலை மூளை வளர்ச்சி குன்றிய மகனுடன் காவல் நிலையத்திற்கும் வீட்டுக்கும் அலையும் காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.